Wednesday 1 January 2020

தமிழுக்கு செய்ய வேண்டியவை யாவை?

சென்ற தொடரின் நீட்சி.....

நம்மால் அருதியிட்டு அனுமானிக முடியும், பாரதி சொன்ன மொழி ஆங்கிலமாகத்தான் இருக்கும்!!!

அப்படி இருக்க, தமிழுக்கு நாம் செய்ய வேண்டியவை யாவை? 

அதனையும் பாரதியே கூறியுள்ளார்!!!


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


இவற்றை செய்வோமேயானால் ஒழிய  தமிழை வாழ்விக்க இயலாது.

இந்த பாடலின் ஏனையவரிகள்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.


யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.



புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Saturday 28 December 2019

தமிழ்த் தாய்

தமிழ் நாடு
 தமிழ்த் தாய்

தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்
தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
1

மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
      மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
      ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
2

கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
      காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
3

சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
      தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
      நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
4

நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
      நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
      சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.
5

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
      காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
      யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
6

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
      சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.
7

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
      ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
      கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
8

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
      பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
      மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
9

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
      சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"



10

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
      இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

11

தந்தை அருள்வலி யாலும்-இன்று
      சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
      ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
                                                                       12
---------
இந்த பாடலின் 12 வது பத்தியில் ”இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும்” என்றும் 7 வது பத்தியில் “முன்பு சான்ற புலவர் தவவலி யாலும்” என்றும் பாரதி கூறுவது, பலகேள்விகளை எழுப்புகிறது.  ஏன் பாரதி இவ்வாறு எழுதவேண்டும்?

மேலும் இப்பாடலின் 10 வது பத்தியில் “மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்” என்று சொல்வதில் ”மேற்கு மொழி” என்று குறிப்பிடுவது எந்த மொழியை? தமிழ் சாகாமல் இருக்க செய்யவேண்டியது யாது?

Bloggers other link

Heat transfer related artice


1.       C. Francis Vimal Raj, C. Sundarraj, M. Varatharajulu and A. Thiagarajan, “Influence of Twisted Tape Insert on Overall Heat Transfer Coefficient and Effectiveness Characteristic of Automobile Radiator” Journal of Advances in Chemistry, Vol. 12, No. 14, pp. 4695 – 4703, 2016.
AU Annexure I S. No.         :               8565
ISSN                                       :               2249 – 7315

Electrical Discharge Alloying related articles



1.       A. Hajamaideen, M.  Duraiselvam, M. Varatharajulu, “Application of Desirability Function Approach for optimized process parameters of Electrical Discharge Alloying of Al 7075 with Nickel powder” Transactions of the Indian Institute of Metals, Vol. 72, No. 7, pp. 1901 – 1916, 2019.  (1 credit point)
AU Annexure I S. No.                 :               11180
Print ISSN                                     :               0972-2815, Online ISSN    : 0975-1645
Link                                         :               https://link.springer.com/content/pdf/10.1007%2Fs12666-019-01666-4.pdf
DOI                                                                :               10.1007/s12666-019-01666-4

2.       A. Hajamaideen, M.  Duraiselvam, M. Varatharajulu, “Synthesis of alloying Al 7075 with Molybdenum for Functional Characterization” International Journal of Recent Technology and Engineering, Blue Eyes Intelligence Engineering & Sciences Publication Vol. 8, No. 3, pp. 5092 – 5103, 2019.  (1 credit point)
Online ISSN                                 :               2277-3878
Link                                                :               https://www.ijrte.org/wp-content/uploads/papers/v8i3/C5717098319.pdf
DOI                                                                :               10.35940/ijrte.C5717.098319