Thursday 27 June 2013

Software development related articles


Software Development in Design, Gear Design, Cost Estimation

1. M. Varatharajulu and R. Rajendran, “Software Development in Design”, CiiT International Journal of Software Engineering and Technology, Vol. 3, No. 8, pp. 366 – 371, 2011. (August 2011 issue)
Print : ISSN 0974 – 9748, Online : ISSN 0974 – 9632, DOI : SE082011008

2. M. Varatharajulu, C. Loganathan, K. Sivaramakrishnan and R. Ayyappan, “A Software Development in Gear Design”, IOSR Journal of Mechanical and Civil Engineering (IOSR–JMCE), Vol. 1, No. 3, pp. 11 – 24, 2014.
Print : ISSN 2320 – 334X, Online : ISSN 2278 – 1684     

3. M. Varatharajulu, N. Arun, and T. Bharathy Raja, “A Software Development for Cost Estimation of Mechanical Components” Global Journal of Pure and Applied Mathematics, Special Issue Vol. 13, No. 2, pp. 384 – 394, 2017. (Scopus 2010 - 2016)
AU Annexure II S. No.       :               7185
Print ISSN                             :               0973 – 1768, Online ISSN : 0973 – 9750

தகவல் அறியும் உரிமைச்சட்ட நேரடி விசாரணையில் மேல்முறையீட்டாளர் சமர்பிக்கும் எழுத்துபூர்வமான வாத உரை


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கோரியிருந்த ஆவணங்கள், தகவல்கள், சான்றிட்ட நகவல்கள் எதுவும் உரியகாலத்திற்குள், வழங்கப்படாததால் முதல் மேல்முறையீடு செய்த பிறகும், தகவல் கிடைக்காததால் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு செய்தபின்னர் இன்று (.......................) நடைபெறுகின்ற நேரடி விசாரணையில் மேல்முறையீட்டாளர் சமர்பிக்கும் எழுத்துபூர்வமான வாத உரை

வழக்கு எண் :
நாள்        :
மேல்முறையீட்டாளர்

அனுப்புனரின் முழு முகவரி (அஞ்சல் எண்ணுடன்)

பெறுனர்

மேன்மை மிகு தமிழ்நாடு தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
(புதிய எண் : 378, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.)
முகமம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

எதிர்மனுதாரர்

பொது தகவல் அலுவலர் மற்றும் வட்டாச்சியர்,

ஐயா வணக்கம்,
      நான்     அன்று இச்சட்டம் பிரிவு 6 (1) ன் கீழ் ஆவண நகவல்கள் கோரி            மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடம் முறையாக விண்ணப்பித்திருந்தேன்.

அவ்விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,         அன்று மேலே கண்ட எதிர்மனுதாரருக்கு எனது விண்ணப்பத்தை அனுப்பிவைத்து, நான் கோரியிருந்த தகவல்களை, உடன் தருமாறு கோரியிருந்தது. 
அதன் மீது எதிர்மனுதாரர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால்,   அன்று இச்சட்டம் பிரிவு 19 (1) ன் கீழ் மேல்முறையீட்டு அதிகாரியான, மாவட்ட வருவாய் அதிகாரிக்கு, முதல் மேல்முறையீடு செய்தேன்.  அதனை பெற்றுக்கொண்ட அவ்வலுவலகம், தனது         தேதியிட்ட கடிதத்தினை, மீண்டும் எதிர்மனுதாரருக்கு அனுப்பி எனது      மற்றும்       தேதியிட்ட விண்ணப்பங்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பணித்தும், எதிர்மனுதாரர் எவ்வித தகவல்களும், தராததால், நான் இச்சட்டம் பிரிவு 19 (3) ன் கீழ் ஆணையத்திற்கு, இரண்டாவது மேல்முறையீடு செய்தேன்.

அதன் படி இன்று நடைபெறுகின்ற இவ்வழக்கு விசாரணையில் கீழ்கண்ட எனது புகாரினை பதிவு செய்து கொள்ள எழுத்துபூர்வமான வாத உரையாக சமர்பிக்கிறேன்.

1.       நான் கோரியிருந்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களையும், சான்றொப்பமிட்டு இன்றைக்கே வழங்க உத்தரவிடுமாறும்,

2.       தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் அழைப்பானை கிடைக்கப்பெற்ற சூழ்நிலையிலும், எதிர்மனுதாரர் இச்சட்டத்தை உதாசீனப்படுத்தி, மதிக்காமல்,  இன்று வரை இருந்து வருவதால், எதிர்மனுதாரர் மீது இச்சட்டம் பிரிவு 20 (1), 20 (2) ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,

3.       இச்சட்டத்தை பொருட்படுத்தாத, மதிக்க தவறிய, மேற்படி எதிர்மனுதாரருக்கு ரூ.25,000/- அபராதமும், அவர்மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள ஆணையர், வருவாய் நிர்வாக துறை (எழிலகம்), சென்னை – 5, அவர்களுக்கு பரிந்துரை செய்யுமாறும்
இதன்மூலம் நான் கேட்டுகொள்கிறேன்.
                                                 இப்படிக்கு,
நாள்  :
இடம் : ஆட்சியர் அலுவலகம், திருச்சி.
                                                  மேல்முறையீட்டாளர்
                                                       (மனுதாரர்)

நகல்
1.   தமிழ்நாடு தகவல் ஆணையம் (தபால் மூலமாக)
2.  எதிர்மனுதாரர் (நேரிலும், தபால் மூலமாகவும்)