Sunday 30 December 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - புதிய மனு


    தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவானது கீழ்கண்ட வகையில் எழுதி, சம்மந்தபட்ட துறையின் பொது தகவல் அளிக்கும் அதிகாரிக்கு, ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பவேண்டும். 
     வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், இச்சட்டதிற்கான கட்டணம் ரூ.10/- யை நீதிமன்ற வில்லையாகவோ (Court stamp) , அஞ்சலக கட்டணமாகவோ (Postal Order) அல்லது வங்கி கேட்பு வரைவோலையாகவோ (Bank Demand draft) இணைத்து அனுப்பவேண்டும்.
     வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், அதற்கான ஆதாரத்தை இணைத்து அனுப்பவேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1) – ன் படி ஆவண நகல்கள் கோரும் விண்ணப்பம்
ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சல்

நாள் :

அனுப்புனர்
     அனுப்புனரின் முழு முகவரி (அஞ்சல் எண்ணுடன்)
    

பெறுனர்
     பொது தகவல் அளிக்கும் அதிகாரி,
     (சம்மந்தபட்ட துறை),
     ஊரின் பெயர்.
     மாவட்டம்,
     மாநிலம்.

மதிப்பிற்குரிய அய்யா,

     வணக்கம்.  நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.  கீழ்கண்ட தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், சான்றொப்பமிட்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  உரிய கட்டணம் ரூ.10/- க்கான நீதிமன்ற வில்லையை (Court stamp) ஒட்டியுள்ளேன்.

தேவைப்படும் தகவல்கள்
1.      
2.      
3.      
4.      
5.      

நாள் :                                         இப்படிக்கு
இடம் :                                    கையொப்பம் (தேதியுடன்)
                                            (மனுதாரர் பெயர்)

உறுதிமொழி
என்னால் சொல்லப்பட்ட மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்று உறுதி கூறுகிறேன்.
                                                  கையொப்பம் (தேதியுடன்)
                                        (மனுதாரர் பெயர்)
--------------------------------------------------------------------------------------------------------------