Friday 18 January 2013

தகவல் அறியும் உரிமைச்சட்ட முதல் மேல் முறையீடு


தகவல் அறியும் உரிமைச்சட்ட மேல் முறையீடு பிரிவு 19 (1) – ன் படி ஆவண நகல்கள் கோரும் விண்ணப்பம்
(ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சல்)
நாள் :
அனுப்புனர்

அனுப்புனரின் முழு முகவரி (அஞ்சல் எண்ணுடன்)

பெறுனர்

மேல் முறையீட்டு அதிகாரி (RTI மனு ஆட்சியராக இருப்பின் மேல் முறையீட்டு அதிகாரி மாவட்ட வருவாய் அதிகாரியாக இருப்பார்),
(சம்மந்தபட்ட துறை),
ஊரின் பெயர் (அஞ்சல் எண்ணுடன்)
மாவட்டம்,
மாநிலம்.      

மதிப்பிற்குரிய அய்யா,

     பொருள்:    தகவல் அறியும் உரிமைச்சட்டம் – முதல் மேல் முறையீடு – தொடர்பாக.
      பார்வை:     1. திரு. பெயர் (முழுமுகவரி) ஆகிய எனது, நாள் (RTI மனுவின் நாள்)
அன்று அனுப்பப்பட்ட விண்ணப்பம்.
2. கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்
3. ஏதேனும் கடிதம் பெறப்பெற்றால் அதன் விபரம் (எதுவும் பெறவில்லையெனில் இதனை விட்டுவிடவும்)

     பார்வை 1 ல் காணும் தகவல்களை தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கோரியிருந்தேன்.  பார்வை 2ல் கிடைக்கப்பெற்ற கடிதத்தின் மூலம் பார்வை 1 – ல் கேட்கப்பட்ட தகவல்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியான பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது தெளிவாகிறது.
     இருப்பினும் தகவல்கள், 35 நாட்களுக்கு மேலான பிறகும் கிடைக்கப்பெறாமையால், அந்த தகவலை தங்களின் பார்வைக்கு முதல் மேல் முறையீடாக தெரிவித்துக்கொள்கிறேன்.
     இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து முழுமையான தகவல்களை கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

நாள் :                                                                                                          இப்படிக்கு
இடம் :                                                                                               கையொப்பம் (தேதியுடன்)
                                                                                                                 (மனுதாரர் பெயர்)

இணைப்பு :     1.    பார்வை 1 ல் காணும் விண்ணப்பம்.
2.    கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்

                3.    பார்வை 3 ல் கிடைக்கப்பெற்ற கடிதம்.